திருமணம் குறித்த செய்திகளுக்கு நச் பதில் கொடுத்த ‘டிடி’.

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பலரது விருப்பமான தொகுப்பாளினியாக வலம்வந்தார், அதேப்போல வெள்ளித்திரையிலும் சில படங்களில் குண்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
சரி, டிடி என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்குவருவது சமூக வலைத்தளங்களில் உலா வரும், இவர் தான் டிடியின் கணவரா? டிடி யாரை திருமணம் செய்துகொண்டார் தெரியுமா? எனும் செய்திகள் தான் இப்படி சமூக வலைத்தளங்களில் டிடிக்கு வரன் பார்ப்பவர்களுக்கு பஞ்சமில்லை.
திவயதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பேட்டியில் பதிலளித்த திவ்யா தர்ஷினி “சமூகவலைதள வதந்திக்கெல்லாம் என்னால் பதில்சொல்ல முடியாது. நான் எப்படிப்பட்டவள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் யாரும் சான்றிதழ் தரவேண்டாம். திருமணம் சாதனை இல்லை என்றும் திருமணத்தை குறித்து பத்து வருடத்திற்கு முன் இருந்த புரிதல் இப்போது இல்லை என்றும் எல்லோருக்கும் அது அத்தியாவசிய தேவையும் இல்லை அது குறித்து நான் கவலைப்படமாட்டேன்” என தடாலடியாக அவர் குறித்து பரவும் செய்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.