பணத்தை திரும்பித் தர முடிவு.. ஹரிஹரன் இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு...
சமீபத்தில் இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசைக் கச்சேரியிலும் குளறுபடி நடந்தது. இந்த இசைநிகழ்ச்சியில் நடிகைகள் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்பா, நடிகர் யோகி பாபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால், அங்கு அளவுக்கதிகமாக கூட்டம் கூடியது. மேலும், சென்னையில் நடந்தது போலவே யாழ்ப்பாணத்திலும் அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததால், ரசிகர்களுக்குப் போதிய இடம் கிடைக்கவில்லை. இதனால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பேசுபொருளான நிலையில், இந்த நிகழ்வை நடத்திய ‘NORTHERN UNI' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் நினைப்பவர்கள் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளது.