டிராகன் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் -தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது .
1759278632000
இந்த தீபாவளிக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் பல சின்ன ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது .அதில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படமும் ஒன்று .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
இளம் ஹீரோக்களான ஹரீஷ் கல்யாண், துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் படங்கள் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அதன்படி ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள ‘டீசல்’ படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனே ஹிட் ஆகியுள்ளன. கபடி விளையாட்டின் பின்னணியில் ஆக்ஷனையும் காதலையும் கலந்து சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.
‘லவ் டுடே’, ‘டிராகன்’ என அடுத்தடுத்து இரண்டு 100 கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திவாசன் இயக்கியுள்ளார். இதில் மமிதா பைஜு ஹீரோயின். புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த இளம் ஹீரோக்கள் படங்களை தவிர சமுத்திரக்கனி, கவுதம் மேனன் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்போதைக்கு இந்த 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் மேலும் ஒரு சில படங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.