தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

deepika
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. நேற்று மாலை 5 மணியளவில் மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Deepika

Share this story