திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் தீபிகா படுகோன் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் தீபிகா படுகோன் சாமி தரிசனம்

ஷாருக்கான் , அட்லீ கூட்டணியில் வெளியான படம் ‘ஜவான்’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. இத்திரைப்படம் ஆயிரத்து 100 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. அண்மையில் ஓடிடி தளத்திலும் வௌியானது. இதையடுத்து ஹிருத்திக் ரோஷன் நடிக்கும பைட்டர் படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்நிலையில், 
தீபிகா படுகோன் தனது தங்கை அனுஷா படுகோனுடன் சேர்ந்து திருப்பதி சென்றார். 



 தீபிகா படுகோன் நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபாதையில் சென்ற பக்தர்கள் தீபிகா படுகோனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் இன்று காலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார். 
 

Share this story