முன்பதிவை துவங்கிய தீபாவளி ஸ்பெஷல் படங்கள்.

photo

இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளிவரவுள்ள கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ , காளிவெங்கட்டின் ‘கிடா’, விக்ரம்பிரபுவின் ‘ரெய்டு’ உள்ளிட்ட படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.

photo

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு தாண்டி குடும்பத்துடன் சென்று புதுப்படம் பார்ப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. கிடா (11ஆன் தேதி) நீங்கலாக மற்ற படங்கள் அனைத்தும் வரும் 10ஆம் தேதியே வெளியாவுள்ள நிலையில் தற்போது படங்களின் டிக்கெட் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  அனைத்து படக்குழுவும் தீவிர புரொமோஷனில் இறங்கியுள்ள நிலையில் இந்த தீபாவளி ரேஸ்ஸில் எந்த படம் முந்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story