டிமான்ட்டி காலனி 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியது
1724580912000
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் கடந்த 15 ஆம் தேதி வெளியாகியது. இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது திரைப்படம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ் நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தின் அடுத்த பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்தார். இந்நிலையில் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.