டில்லி ரிட்டன்ஸ்... லோகேஷ் கனகராஜை சந்தித்து அப்டேட் கொடுத்த கார்த்தி...

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையும் கைதி 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படமே இதற்கான ஆரம்பம்.
DILLI RETURNS
— Karthi (@Karthi_Offl) March 15, 2025
Let it be another fantastic year @Dir_Lokesh@DreamWarriorpic @KvnProductions pic.twitter.com/sLLkQzT0re
கூலி படத்தை முடித்த பின் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சந்தித்துள்ள நடிகர் கார்த்தி, லோகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு டில்லி ரிட்டன்ஸ் என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.