ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘டீமன்’... மிரட்டலான டிரெய்லர் வெளியீடு !

Demon

உண்மை சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள ‘டீமன்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஹாரர் த்ரில்லர் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அந்த ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டீமன்‘. ‘பிகினிங்’ படத்தின் மூலம் பிரபலமான சச்சின் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்நிதி கதாநாகியாக நடித்துள்ளார்.

Demon

இவர்களுடன் கும்கி அஸ்வின், ரவீனா தாஹா, பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லருடன் ஹாரரில் உருவாகியுள்ள இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் பழனிசாமி இயக்கியுள்ளார். 

Demon

பிரபல இயக்குனர் வசந்தபாலனின் விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோனி ரஃபேல் இசையமைக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story