திக் திக் நிமிடங்களில் சிக்கவைத்த டிமான்டி காலனி 2.. அப்படி என்ன இருக்கு... ரசிகர்கள் விமர்சனம்

Demonte colony 2

இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான். முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது படத்தில் தரமான ட்விஸ்ட் வைத்து எடுத்துள்ளார்.

படம் பார்க்க பயமாக இருந்தது. படத்தினை ஓடிடியில் பார்ப்பதைவிட, இந்தப் படம் தியேட்டரில் பார்க்கவேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.  சமீபத்தில் வெளியான பேய் படங்களில் இந்த படம் மிகவும் தரமான படம். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தினையும் இணைக்கும் காட்சி பாராட்டுக்குரியது. படத்தின் இசையை பாராட்டலாம் என தெரிவித்துள்ளனர்.படம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் பாகம் பார்க்கின்றோம் என்ற உணர்வு இல்லை. அப்படி இருக்கும்போது, படத்தினை கட்டாயம் பார்க்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story