அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் ‘டிமான்டி காலனி 2’.. ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்

DemonteColony2

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அஜய் ஞானமுத்துவின் பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.  

DemonteColony2

இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். 

வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story