டிமாண்டி காலனி 2 வெளியீடு: ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Arulnidhi

டிமாண்டி காலனி 2 திரைப்படம் இன்று வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அப்படத்தின் நடிகர் அருள்நிதி பிரபல ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிமாண்டி காலனி 2’. டிமாண்டி காலனி முதல் பாகத்தில் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி முதல் பாகம் வெளியான போது ரசிகர்களுக்கு இப்படம் முழு திகிலூட்டும் அனுபவத்தை வழங்குவதாக விமர்சனங்கள் வெளியானது.‘டிமாண்டி காலனி 2’ அறிவிக்கப்பட்டது முதல் எதிர்பார்ப்பு குறைவாக இருந்த நிலையில், டிரெய்லர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு படத்தின் மேக்கிங் குறித்து டிரெய்லரில் தெரிந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர். சமீப காலமாக இரண்டாம் பாகம் என வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவதில்லை. ஆனால் டிமாண்டி காலனி 2 டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிமாண்டி காலனி 2 சிறப்பு காட்சியை பார்த்த கோலிவுட் நடிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களை தெரிவித்தனர்.இன்று (ஆகஸ்ட் 15) டிமாண்டி காலனி வெளியானதை தொடர்ந்து சென்னையில் பிரபல தியேட்டரான ரோகிணியில் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் நடிகர் அருள்நிதி ரசிகர்களுடன் படம் பார்த்தார். இந்நிலையில், டிமாண்டி காலனி 2 திரைப்படம் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Share this story