மிரட்டும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர்..
1721826173498

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியுள்ளது. அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 7 ஆண்டுகளை அடுத்து 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ள படக்குழுவினர், திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.