அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2'.. படத்தின் ரிலீஸ் அப்டேட்..!
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் மாஸான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 7 ஆண்டுகளை அடுத்து 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள
Bringing to you #DemonteColony2.
— Red Giant Movies (@RedGiantMovies_) July 22, 2024
In theatres near you, very soon. @BTGUniversal @arulnithitamil @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/zUWjAvvxMS
இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது.