அருள் நிதியின் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்.

photo

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. ஹாரர் கதைகளத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் எழு ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

அதில், அருள்நிதி ஹாரர் லுக்கில், மயானத்தின் நடுவே  இருந்தபடி கையில் ‘டிமான்டி காலனி 2’ என்ற பெயரை வைத்துள்ளார் இந்த போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. சாம் சி. எஸ் இசையமைத்துள்ள இந்த படம் சென்னை, ஓசூர், ஆந்திரா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணியில் உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. முதல் பாகத்தை போன்றே இந்த பாகத்திலும் பல சர்ப்ரைஸ் காட்சிகள், திடுக்கிடும் திருப்பங்கள், த்ரில்லிங் சீன்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

Share this story