‘டிமான்டி காலனி2’ டிரைலர் இதோ!

photo

அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் ‘டிமான்டி காலனி2’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

photo

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருள் நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனத் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியது அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் மிரளவைக்கும் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் அதனை விட அசத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story