‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு திருமணம்..!

டிமான்ட்டி காலனி பட இயக்குனருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அஜய் ஞானமுத்து. அதைத் தொடர்ந்து இவர் அருள்நிதி நடிப்பில் வெளிய டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் இவர் நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் ஆகியோரின் நடிப்பில் இமைக்கா நொடிகள் எனும் தரமான திரில்லர் திரைப்படத்தையும் இயக்கி மீண்டும் வெற்றி கண்டார்.
அதேசமயம் இவருக்கு நடிகர் விக்ரமை இயக்கும் வாய்ப்பு கிடைக்க கோப்ரா படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
அடுத்தது அஜய் ஞானமுத்து, விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஜய் ஞானமுத்து, தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று (ஜனவரி 19) சென்னையில் கிருத்துவ முறைப்படி தேவாலயத்தில் நடைபெற்றிருக்கிறது. இவர்களின் திருமணத்திற்கு விக்ரம், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் அஜய் ஞானமுத்துவின் திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.