'தளபதி விஜய்'யால் ஒரே நாளில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறிய 'ஹாலிவுட் நடிகர்'.

photo

தளபதியின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், சமீபத்தில் அவர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘ முதல்முறையாக விஜய்யின் ஃபேன் பாய் மொமன்ட்’ என பதிவிட்டிருந்தார். அதில் ஹாலிவுட் நடிகர் ஒருவரை பார்த்து விஜய் கையை விரித்துக்கொண்டிருந்தது இடம் பெற்றிருந்தது.

photo

அந்த புகைப்படம் இணையத்தில் பரவ, நம்ம ஆளுங்க யார் அந்த நடிகர் என தேட ஆரம்பித்தனர். பின்னர் அது டென்சல் வாஷிங்டன் என்றும் விஜய் பார்த்த படம் ‘The Equalizer 3’ என்றும் கண்டுபிடித்தனர். உடனே சும்மா விடுவோமா நாங்க…… என்பது போல அந்த நடிகர் குறித்து அதிகம் தேடியுள்ளனர். இதனால் அவர் ஒரே நாளில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய்யால் ஒரே புகைப்படத்தில் பேமஸ்ஸான நடிகர் டென்சல்லை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் சிலர்.


 

Share this story