தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
1746879957827

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான 2013-ல் வெளியாகி வெற்றிபெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இன்ஃபனிடி கிரியேஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் வெளியான ஓம்காளி ஜெய்காளி தொடரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.