தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு தீவிரம்

தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு தீவிரம்

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல படங்களை இயக்கியவர், எழில். இவர் விமல் நடிப்பில் இயக்கிய படம், ‘தேசிங்குராஜா’. வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இப்போது எழில் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த விமல் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். 

தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு தீவிரம்

ஜனா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உட்பட பலர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசை அமைக்கிறார். செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடை பெற்றுவருகிறது.

Share this story