"நான் என் பாடலுக்கு காப்புரிமை கேட்பது இல்லை’-எந்த இசையமைப்பாளர் இப்படி சொல்கிறார் தெரியுமா ?
1763602221000
பிரபல ம்யூசிக் டைரக்டர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை மீண்டும் பயன் படுத்தினால் காப்புரிமை கேட்கும் நிலையில் ,ஒரு ம்யூசிக் டைரக்டர் காப்புரிமை வேண்டாம் என்று கூறியுள்ளார் .அது பற்றி நாம் காணலாம்
திரைப்பட பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் தேவாவிடம், `நீங்கள் இசை அமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பது இல்லை?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தேவா, `நான் எப்போதுமே காப்புரிமை கேட்டது இல்லை. அப்படியே நான் கேட்டாலும், அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. நான் காப்புரிமை கேட்கக்கூடாது என்று முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. கடந்த 1990களில் நான் இசை அமைத்த பல பாடல்கள் இப்போது வைரலாகின்றன. 1992ல் இசை அமைத்த ‘கரு கரு கருப்பாயி’ என்ற பாடல், மீண்டும் ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டு வைரலானது.
நான் எப்போதோ இசை அமைத்த ஒரு பாடல் இந்த தலைமுறைக்கும் பிடித்துள்ளது. அதற்கு நான்தான் இசை அமைப்பாளர் என்ற விஷயமும் தெரிகிறது. இந்த திருப்தியே எனக்கு போதும். அதனால்தான் நான் காப்புரிமை கேட்பது இல்லை’ என்றார்.