தேவரா படத்தில் இரு வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் - வைரலாகும் போஸ்டர்
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகயுள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் காட்சியளிக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியாகவுள்ளனர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2.5 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.