'தேவரா பாகம் 1' : மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அனிருத்
1725258613000
இசையமைப்பாளர் அனிருத் 'தேவரா பாகம் 1' படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. மேலும் இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த பாடலாக 'தாவுடி' என்ற தலைப்பில் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
#Daavudi , next single from #Devara 🎉🎉🎉@tarak9999 anna and #JanhviKapoor on fire🕺💃🔥#KoratalaSiva sir ⚡️⚡️⚡️
— Anirudh Ravichander (@anirudhofficial) September 1, 2024
#Daavudi , next single from #Devara 🎉🎉🎉@tarak9999 anna and #JanhviKapoor on fire🕺💃🔥#KoratalaSiva sir ⚡️⚡️⚡️
— Anirudh Ravichander (@anirudhofficial) September 1, 2024