'காதல் கோட்டை' பட இயக்குநரை நெகிழவைத்த தேவயானி

devayani

நடிகை தேவயானி தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும் பொதுநிகழ்ச்சிகளில் அவ்வபோது கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று(01.01.2025) தஞ்சாவூர் பேராவூரணியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு விழாவை முடித்துவிட்டு, இயக்குநர் அகத்தியன் பூர்வீக வீட்டிற்கு சென்றுள்ளார். அகத்தியன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை படம் மூன்று தேசிய விருதுகள் வென்றது. இப்படம் மூலம் தேவயானி மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். devaiyani

விழாவை முடித்த தேவயானி, அகத்தியன் பூர்விக வீடு இங்கு இருப்பதை தெரிந்து, பின்பு விசாரித்து அங்கு சென்றுள்ளார். அங்கு அகத்தியனின் சகோதரி இருந்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்து விட்டு சென்றுள்ளார். இதை அறிந்த அகத்தியன் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story