மிஷ்கின் இசையில் உருவாகியுள்ள ‘கலவி பாடல்’... ‘டெவில்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

Devil

மிஷ்கின் இசையில் உருவாகியுள்ள ‘டெவில்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் மிஷ்கினின் சகோதரரும், ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த் மற்றும் பூர்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Devil

மேலும் இந்த படத்தில் ஆதிக் அருண், இயக்குனர் மிஷ்கின், சுபஸ்ரீ ராயகுரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரில்லார் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக ஆர்.ராதாகிருஷ்ணனும், டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. 

Devil

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் மிஷ்கின் இசையில் உருவாகியுள்ள ‘கலவி பாடல்’ வெளியாகியுள்ளது. மிஷ்கின் எழுதியுள்ள இந்த பாடலை தேவு மேத்யூ என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story