மிரட்டும் ‘டெவில்’ படத்தின் டிரைலர்!

photo

விதார்த், பூர்ணா இணைந்து நடித்துள்ள ‘டெவில்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

photoமாருதி பிலிம்ஸ் சார்பாக ஆர். ராதா கிருஷ்ணன் , எச் ஹரி தயாரிப்பில், ‘சவரகத்தி’ படத்தின் மூலமாக பிரபலமான இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘டெவில்’. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வளர்ந்து வரும் நடிகர் விதார்த் மற்றும் நடிகை பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இயக்குநர் மிஸ்கின், ஆதிக் அருண், சுபஸ்ரீ ராயகுரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தான் முதல் முறையாக இயக்குநர் மிஸ்கின் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது.

மிரட்டும் விதமாக படத்தின் டிரைலர் உள்ளது. இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

Share this story