"உங்களைப் பாதிக்கும் நல்ல கதை இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்"-எஸ் .தாணு
1789093818000
சென்னையில் நடைபெற்ற விருது அறிமுக விழாவில்
கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது: கஸாலி எப்போது என்னை அணுகினாலும் திரையுலகின் நலனுக்காகவும், புதிய திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே பேசுவார். அதனால் அவரது எந்த முயற்சிக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
குறும்படங்களை உருவாக்கி அனுப்பியுள்ள இளம் படைப்பாளிகள் அனைவரும் நாளைய திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நல்ல கதைகளை உருவாக்கும் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உங்களைப் பாதிக்கும் நல்ல கதை இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள், அதை திரைப்படமாக உருவாக்க என்னால் முடிந்த உதவியைச் செய்வேன். புதிய இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழிகாட்டுகிறது இந்த குறும்பட விருதுகள் முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.

