பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் 51வது படம்... பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

dhanush

 சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவர் அடுத்து நடிக்கும் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தனுஷ் இரண்டாவது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்த படத்தை ஹேப்பி டேஸ், லீடர், பிடா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்களை  கொடுத்த பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ளார்.  

dhanush

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சுமார் 125 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 

dhanush

தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தனுஷ் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story