‘தனுஷ் 55’ பட ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...!

dhanush

ராஜ்குமார் பெரியசாமி- தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள ‘தனுஷ் 55’ பட ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 

அமரன் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55வது படத்தை இயக்க உள்ளார். தற்போது தனுஷ் இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு ராஜ்குமார் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்க உள்ளார்.

/dhanush

இந்த நிலையில் தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்குமார் ‘தனுஷ் 55’ படம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக் கூடிய பலரை பற்றிய கதை இது. ஆனால் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை.ஆனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை இயல்பாக இயங்கிக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் எல்லாம் மிக முக்கியமான காரணம். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் நம்முடைய கண்ணுக்கு தெரியாமல் நமக்கிடையே உள்ளனர். அவர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவமாக இந்த படம் இருக்கும். இவ்வாறு ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.

Share this story