கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் படக்குழு.. தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ குறித்து புதிய அறிவிப்பு !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கேரக்டர் அறிமுக போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்.