LCU வில் இணைந்தாரா தனுஷ்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.

photo

லோகேஷ்- விஜய் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த வருடம் ரசிகர்களால் பெரிதும் எதிரிபார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இந்தநிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதாக செம மாஸ்ஸான தகவல் வெளியாகியுள்ளது.

photo

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் லியோ திரைப்படம், காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் படம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து  வருகிறது. அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்தில், விஜய் உடன்  திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ்  என பலரும் இணைந்துள்ளனர்.

photo

இந்த நிலையில் விக்ரம் படத்தில் எப்படி சூர்யா, ரோலக்ஸ்ஸாக கேமியோ ரோலில் மிரட்டியிருந்தாரோ, அதேப்போல தற்போது ‘லியோ’ படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம்! இதற்காக 15 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். ரோலக்ஸ் போன்றே இந்த கதாப்பாத்திரமும் தரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேப்போல இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



 

Share this story