தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு!

dhanush

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார்.நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜரான நிலையில், நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர்.மேலும், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். தற்போது இதுதொடர்பான வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

dhanush
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 3 முறையாக வழக்கில் இருவரும் ஆஜராகாத காரணத்தால் வழக்கு தள்ளி தள்ளிப்போனது. இந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தனித்தனியாக குடும்பநல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.D

தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் ஆஜரான நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


 

Share this story