ஒரே திரையரங்கில் ‘ஜெயிலர்’ படம் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

photo

ஜெயில் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் FDFS பார்த்த நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் அவரது முன்னாள் கணவர் தனுஷ் இருவரும் ஒரே திரையரங்கில் படம் பார்த்துள்ளனர்.

photo

சென்னையில் உள்ள பிரபல திரையங்கான  ரோகினி திரையங்கிற்கு முதலில் தனுஷ் வந்தார். அதன் பிறகு சில நிமிடங்களில் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது மகன்கள், லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், அவரது மகன் வேத் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் பெற்றோர்கள் வந்தனர்.  இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே திரையங்கிற்கு படம் பார்க்க வந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஜினி குடும்பத்தார் ஜெயிலர் என எழுதப்பட்ட கேக்கை வேட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

photo

Share this story