ப்ரீயட் படமாக உருவாகும் தனுஷ் படம்.. மாரி செல்வராஜ் கொடுத்த செம்ம அப்டேட் !

mari selvaraj

தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.  

‘வாத்தி’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ், தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

mari selvaraj

‘கர்ணன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.  தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படம் குறித்து சுவாரஸ்சியமான தகவல்களை இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி இப்படம் வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை இயக்க தன்னை தயார்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

Share this story