மீண்டும் இணைந்த 'கர்ணன்' கூட்டணி... அதிரடியாக வெளியானது தனுஷ் படத்தின் அறிவிப்பு !

dhanush

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கர்ணன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘அசுரன்’ படத்திற்கு பிறகு தனுஷுக்கு நல்ல பெயரை இந்த படம் வாங்கி கொடுத்தது. இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்றால் எப்படி இருக்கும். 

dhanush

ஆம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார், இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம்  தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை  நடிகர் தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மாரி செல்வராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

dhanush

‘வாத்தி’ படம் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. 'கேப்டன் மில்லர்'  படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story