தயாரிப்பாளர் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தனுஷ் - நயன்தாரா...!
இன்று நடைபெற்ற தயாரிப்பாளரின் திருமண விழாவில், தனுஷ் மற்றும் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், அந்த வீடியோவுக்கு தேவையான 'நானும் ரவுடிதான்’ பட காட்சிகளை தனுஷ் தரவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று தனுஷ் நடித்து வரும் ’இட்லி கடை’ என்ற படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கர் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனுஷ் கலந்து கொண்டார். அதே நேரத்தில், நடிகை நயன்தாராவும் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் கலந்து கொண்டார். மேலும், சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குறிப்பாக, சிவகார்த்திகேயன், அனிருத், மற்றும் நயன்தாரா ஆகியோர் திருமண மேடை அருகே ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், தனுஷ் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தார்; இன்னொரு பக்கம் நயன்தாரா தனது கணவருடன் உட்கார்ந்து இருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரே திருமண விழாவில் தனுஷ் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருந்தாலும், இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்றும், பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.