கமலுடன் கூட்டணி அமைத்த தனுஷ்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

dhanush
கமல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் நெல்சன். ‘கோலாமாவு கோகிலா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘டாக்டர்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் முன்னணி ஹீரோக்களின் கவனம் பெற்ற இயக்குனராக நெல்சன் மாறினார். 

dhanush

இதையடுத்து விஜய் வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் போதிய வெற்றியை பெறாததால் விமர்சினத்திற்கு உள்ளானார். தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

dhanush

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்திற்கு தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிரூத் தனுஷ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தற்போது நடிகர் தனுஷ், தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story