"தனுஷ்- நெல்சன்" கூட்டணி - இது வேறலெவல் தகவல்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெய்லர்’ படபணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அதை முடித்துக்கொண்டு அடுத்ததாக  நெல்சன் தனுஷை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெய்லர் படத்தின் தனது பங்கிற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் பணிகள் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில்,  அதற்கு இடையில் நடிகர் தனுஷை நெல்சன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷின் அடுத்த படத்தை நெல்சன் தான் இயக்க இருக்கிறாராம். இந்த படம் பெரிய பட்ஜட்டில் தயாராக உள்ளதாம். தனுஷிற்கான, கதையின் ஒன்லைனை நெல்சன் ஜெய்லர் படத்திற்கு முன்னரே தயாரித்துவிட்டாராம். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

photo

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெய்லர் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தகக்து.

 

Share this story