பிரபுதேவா நிகழ்ச்சியில் வைப் செய்த தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா...

dhanush

சென்னையில் நடைபெற்ற பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சென்னை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா தன்னுடைய முதல் நடன நிகழ்ச்சியை நேற்று நடத்தினார். இதில், நடிகர்கள் வடிவேலு,  தனுஷ், எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில், பிரபு தேவா தான் நடித்த, நடன இயக்குநராகப் பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முக்கியமாக, ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.



 
மேலும், நடிகர்கள் பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ப்ரீத்தி அஸ்ராணி, பார்வதி நாயர், சாக்க்ஷி அகர்வால், உள்ளிட்டோர் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

Share this story