மன கசப்பு மறைந்ததா ?... தனுஷூடன் மீண்டும் இணையும் வடிவேலு !

dhanush

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷூடன் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி நடிகராக தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. 

 mari selvaraj

இந்த படத்திற்கு பிறகு தான் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதன்படி 'கர்ணன்' படத்தின்  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது நடிப்பதாக தனுஷ் அறிவித்தார். தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

mari selvaraj

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். இதையடுத்து இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் தனுஷ் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். இதற்கிடையே 'படிக்காதவன்' படத்தில் நடித்தபோது தனுஷ் மற்றும் வடிவேலு இடையே மனகசப்பு ஏற்பட்டது. அதனால் இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து நடிக்காமல் இருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   ‌

‌ 

Share this story