விரைவில் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி....!

dhanush

‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.  
சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனித்து வருகிறார் வெற்றிமாறன். அப்படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்கவுள்ளதை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இப்படத்துடன் சேர்த்தால் தனுஷ் நடிக்க 3 படங்களை தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம்.

dhanush
இயக்குநர் விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் மூவரும் தனுஷ் இயக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் முதலாவதாக விக்னேஷ் ராஜா இயக்கும் படம் தொடங்குகிறது. இதற்காக ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. வேல்ஸ் நிறுவனத்துக்காக மீண்டும் ‘வடசென்னை 2’ படத்துக்காக தான் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Share this story