தனுஷ் பிறந்தநாளை ஒட்டி வட சென்னை, புதுப்பேட்டை படங்கள் ரீ ரிலீஸ்

dhanush

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ , வடசென்னை, யாரடி நீ மோகினி, மூணு , வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட திரைப்படங்கள் வரும் 24-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தனுஷின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், வரும் 26ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 

Share this story