‘டி50’ படத்தில் தேவா வில்லனா? – வெளியான சுவாரஸ்ய தகவல்.

தனுஷ் இயக்கி நடித்துவரும் அவரது 50வது படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை இசையமைப்பாளர் தேவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
டி 50 படத்தில் எஸ்.ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Music director Deva says Dhanush wanted him to be the main villain in #D50.pic.twitter.com/FXGlFigrRl
— LetsCinema (@letscinema) September 2, 2023
அதாவது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசையமைப்பளரும், பாடகருமான தேவா பகிந்துகொண்ட தகவல் கவனம் பெற்றுள்ளது. ‘ தனுஷ் தன்னை டி50 படத்தில் வில்லனாக நடிக்க அணுகியதாகவும். உங்க அளவுக்கு யாரும் வடசென்னை பாஷை பேச முடியாது என கூறியாதாகவும் தெரிவித்தார். அதற்கு பாடும்போதே நோட்ஸ் இல்லாமல் என்னால் பாட முடியாது. இதுல டயலாக் ஞாபகம் வச்சி பேசுவது கஷ்டம் என கூறி நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார்’ தேவா.