நாளை செம்ம ட்ரீட் இருக்கு.. ‘கேப்டன் மில்லர்’ -க்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள் !

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ், நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 10.25 மணிக்கு வெளியிடப்படும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Update from #CaptainMiller TOMORROW 10:25AM #21MajesticYrsOfDHANUSH
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 9, 2023