பட்டாசு போல் வெடிக்கப்போகும் ‘கேப்டன் மில்லர்’... தனுஷ் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. !

captain miller
 தனுஷ் பிறந்தநாளையொட்டி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்‘ உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

captain miller

1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.  தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

captain miller

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளையொட்டி வரும் ஜூலை 28-ஆம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Share this story