மகன்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நடிகர் ‘தனுஷ்’.

photo

நடிகர் தனுஷ் அவரது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவருடன் இணைந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

நடிகர் தனுஷ், இயக்குநரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.  சமீபத்தில் இருவரும் தங்களது பிரிவை அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் தங்களது வேலைகளில் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதேப்போல மகன்களான யாத்ரா, லிங்காம் இருவரும் ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றனர். இருந்தாலும் தனுஷுடன் நிறைய பொது நிகழ்ச்சிகள், பட விழாக்களில் அவர்களை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் வேளையில் தனது மகன்களான யாத்ரா, லிங்காவுடன் வீட்டில் சிறப்பாக பூஜை செய்து  கொண்டாடியுள்ளார். அலங்கரிக்கப்பட்ட விநாயகர் முன்பு மூவரும் அமர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story