‘மாமன்னன்’ உணர்ச்சிப்பூர்வமானது - படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு... நன்றி தெரிவித்த உதயநிதி !

maamannan

‘மாமன்னன்’ திரைப்படம் உணர்ச்சிப்பூர்வமானது என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை வெளியாகும் இந்த படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

maamannan

இந்த படத்தின் சிறப்புக் காட்சியை இன்று பார்த்த நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படம் உணர்ச்சிப்பூர்வமானது. வடிவேலு மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

maamannan

இதற்கு நடிகர் உதயநிதி, தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுடைய எல்லா ஒத்துழைப்பிற்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இது நடந்திருக்காது என்று தெரிவித்துள்ளார்.    

Share this story