லேட்டஸ்ட் தகவல்: அடுத்த படத்தை இயக்க தயாரான ‘தனுஷ்’.
1702189950991
நடிகர், தயாரிப்பாள்ர், பாடலாசிரியர், பாடகர் என தனுஷ் பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ள அவர் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார். அடுத்த கட்டமாக அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது.
கோபுரம் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் தனுஷின் அக்கா மகனான வருணை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். படத்தின் பூஜை சன் டிவி அலுவலகத்தில் நேற்று நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடந்து அந்த படத்தில் தனுஷும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளதாம். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.