ராயன் படம் வெற்றிக்காக குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு படையெடுத்த தனுஷ்

நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் நிலையில் தனுஷ், செல்வராகவன், கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலில் வழிபாடு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது.நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது திரைப்படமான ராயன் வருகிற 26 ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவருடைய அண்ணன் செல்வராகவன் நடிகர் எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தனது 50வது திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் தனுஷ், அவருடைய அண்ணன் செல்வராகவன், இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா மற்றும் தனுஷின் மகன்கள் குடும்பத்தினர்கள் அவரது குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமியின் குலதெய்வ கோவில் போடியில் உள்ளது, அந்த கோவிலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றனர்.