பொறுத்தது போதும் பொங்கிய தனுஷ் ரசிகர்கள் – “வடசென்னை 2” அப்டேட் எப்போ சார் வரும்?

photo

"வடசென்னை2" திரைப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என தனுஷின் ரசிகர்கள் பொங்கி எழுந்து வருகின்றனர்.

photo

தனுஷ், வெற்றிமாறம் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற திரைப்படம் ‘வடசென்னை’. இந்த திரைப்படத்திற்கு முன்னர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன்,ஆடுகளம் என இந்த கூட்டணி தனது முத்திரையை பதித்திருந்தது. இருந்தும் வடசென்னை கொஞ்சம் ஸ்பெஷல்தான், வடசென்னை மக்களில் வாழ்வியலுக்குள் இந்த படம் நம்மை இட்டு சென்றது என்றே சொல்ல வேண்டும். எதார்த்தமான பேச்சு, சண்டை காட்சி, பேச்சு வழக்கு என இந்த படத்தில் ஒரு குறைகூட சொல்லமுடியாத வண்ணம் படத்தை பார்த்து பார்த்து  செதுக்கி இருந்தார் வெற்றி.

photo

இதனாலேயே படம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர் ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குநர் அறிவித்திருந்தார். அதற்காக ரசிகளும் காத்திருந்தனர், ஆனால் தற்போது வரை இது குறித்த ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை. இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம், கடந்த 2021ஆம் ஆண்டு ஆர்யா, பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு வெளியானதால், தனுஷின் ரசிகர்கள், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து ட்விட்டரில் “vadachennai2” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி, படத்தை இயக்கவும் கோரிக்கை விடுத்து வைக்கின்றனர்.

photo

photo

photo

Share this story